ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான, அதேசமயம் சின்ன பட்ஜெட் நடிகர்களை கொண்டு மலையாளத்தில் உருவாகியுள்ள படம் ‘லட்டு’. வினய் போர்ட், சபரீஷ் வர்மா, பாலு வர்கீஸ் ஆகியோர் நடித்துள்ள இந்தப்படத்திற்கு நேரம் மற்றும் பிரேமம் படத்தில் சூப்பர்ஹிட் பாடல்களை கொடுத்த ராஜேஷ் முருகேசன் தான் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்தப்படத்தின் முதல் வீடியோ பாடலை இசையமைப்பாளர் அனிருத் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நண்பனின் திருமணத்திற்காக திருச்சூரிலிருந்து கோதமங்கலம் வரை மற்ற நண்பர்கள் மேற்கொள்ளும் ஜாலியான பயணமும் திருமண மண்டபத்தில் ஜாலி கலாட்டாக்களும் தான் மொத்தப்படமுமே