பல படங்களில் இணைந்து நடித்த பிருத்விராஜ்-மம்தா மோகன்தாஸ் ஜோடி, நான்கு வருடங்கள் கழித்து மீண்டும் இணைந்து நடிக்கும் படம் தான் ‘டெட்ராய்ட் கிராஸிங்’. அமெரிக்காவின் மெக்ஸிகன் மாகாணத்தின், டெட்ராய்ட் நகரில் உள்ள ஸ்ட்ரீட் கேங்ஸ் பற்றிய கதை தான் இது.. அதனால் தான் படத்திற்கு ‘டெட்ராய்ட் கிராஸிங்’ என டைட்டில் வைத்தனர்.. ஆனால் இப்போது இந்தப்படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ள நிலையில் படத்தின் டைட்டிலை ‘ரணம்’ என மாற்றியுள்ளனர்.
டெட்ராய்டில் பல்வேறு ஸ்ட்ரீட் கேங்ஸ் இயங்கி வருகின்றன. அங்கே நம் தமிழ் ஆட்களும் தனித்தனியாக ஸ்ட்ரீட் கேங் உருவாக்கி வைத்துள்ளார்களாம்.. இவர்களுக்குள் நடக்கும் மோதல், இந்த கேங் ஒன்றில் இருக்கும் நாயகன் பிருத்விராஜ், இதில் இருந்து எப்படி வெளிவருகிறார் என்பது தான் படத்தின் கதையாம்.. டெட்ராய்ட் நகரில் தொடர்ந்து 50 நாட்கள் இந்தப்படத்தின் படப்பிடிப்பை நடத்த இருக்கிறார்களாம். பிருத்விராஜ் – நிவின்பாலி இருவரும் இணைந்து நடித்து, கடந்த 2015ல் வெளியான ‘இவிடே’ படத்தில் இணை இயக்குனராக பணிபுரிந்த நிர்மல் சகாதேவ் என்பவர் தான் இந்தப்படத்தை இயக்க உள்ளார்.