மேயாதமான், கத்துக்குட்டி, மான்ஸ்டர் என நடித்து வந்த பிரியா பவானி சங்கர், அதையடுத்து அரை டஜன் படங்களில் கமிட்டாகி விட்டார். குறிப்பாக, அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் அவரது 58வது படத்தில் கமிட்டாகியிருந்த பிரியா பவானி சங்கர், திடீரென்று இந்தியன்-2 படவாய்ப்பு வந்ததால் அந்த படத்திற்கும் கால்சீட்களை கொடுத்துவிட்டதாக தெரிகிறது. இதனால், விக்ரம் படத்தில் அவர் நடிப்பது சிக்கலுக்கு உள்ளாகி உள்ளது. கால்ஷீட் பிரச்னையால் இப்படத்திலிருந்து பிரியா பவானி சங்கர் விலகினாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்கிறார்கள்.

