பிரபாஸ் நடித்த சாஹோ படத்தில் நாயகியாக நடித்தவர் ஹிந்தி நடிகை ஸ்ரத்தா கபூர். அடுத்து ஹிந்தியில் ஒரு படத்தில் கதையின் நாயகியாக நடிக்க தயாராகி வருகிறார்.
இந்நிலையில், அவர் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, அவரிடத்தில் சாஹோ படம் குறித்தும், பிரபாசுடன் பணியாற்றிய அனுபவம் குறித்தும் கேள்வி கேட்கப்பட்டது. ஆனால் அந்த கேள்விக்கு உரிய பதிலை சொல்லாமல், வேறு கருத்துக்களை சொல்லி திசை திருப்பினார் ஸ்ரத்தா கபூர். இப்படி தொடர்ந்து அவர் செய்ததால், அவர் பிரபாசை அலட்சியப்படுத்திவிட்டதாக அவரது ரசிகர்கள் வீடியோ வெளியிட்டிருப்பதோடு, ஸ்ரத்தா கபூரை வசைபாடி வருகின்றனர்.

