‘சாஹோ’ படத்திற்குப் பிறகு பிரபாஸ் நாயகனாக நடிக்கும் படத்திற்கு ‘ஜான்’ எனப் பெயரிட்டு முதல் கட்டப் படப்பிடிப்பை நிறைவு செய்து விட்டதாக டோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தை 2015ல் வெளிவந்த ‘ஜில்’ என்ற படத்தை இயக்கிய ராதா கிருஷ்ண குமார் இயக்கி வருகிறாராம். நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.
‘சாஹோ’ படப்பிடிப்பு முடிவடைந்ததும் வெளிநாட்டிற்குச் சென்றுவிட்டார் பிரபாஸ். அவர் இல்லாமலேயே முதல் கட்டப் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார்கள். அவர் திரும்பிய பின் அடுத்த மூன்றே மாதங்களில் மொத்த படப்பிடிப்பையும் நிறைவு செய்து 2020 கோடை விடுமுறையில் படத்தை வெளியிட உள்ளார்களாம்.
‘சாஹோ’ படம் ஹிந்தியில் மட்டுமே லாபத்தைக் கொடுத்து மற்ற மொழிகளில் நஷ்டத்தைக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

