பாகுபலி 2 படத்தையடுத்து பிரபாஸ் நடித்துள்ள நான்கு மொழிப் படம் சாஹோ. சுஜித் இயக்கி வரும் இந்த படத்தில் பிரபாசுடன் ஸ்ரத்தா கபூர், நீல்நிதின் முகேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிகட்ட பணிகள் நடக்கிறது.
இந்த நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியான நிலையில், டீசர் பிரபாஸின் பிறந்த நாளான அக்டோபர் 23-ந்தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய நான்கு மொழிகளிலும் வெளியாகயிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.