பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து பிரபாஸ் நடித்த சாஹோ படம் கடந்த வருடம் வெளியானது. ஆனால் அந்த படத்திற்கு ஏற்பட்டிருந்த எதிர்பார்ப்பில் பாதியை கூட ஈடுசெய்ய முடியவில்லை. இந்நிலையில் பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தை, தேசிய விருது பெற்ற மகாநடி படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்குகிறார். பிரபல தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி பிலிம்ஸ் தங்களது 50ஆம் ஆண்டு பொன்விழா தயாரிப்பாக இந்த படத்தை தயாரிக்கிறது.
இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. எவடே சுப்பிரமணியம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான நாக் அஸ்வின் மகாநடி படத்திற்காக மூன்று தேசிய விருதுகளை பெற்றுத் தந்ததும், அந்த படத்தை கமர்சியல் வெற்றி படமாக ஆக்கியதும் தான் பிரபாஸ் படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்க காரணமாக சொல்லப்படுகிறது

