ஹிந்தியில் அமிதாப்பச்சன் நடித்து வெளிவந்த ‘பின்க்’ படம் தமிழில் கடந்த வருடம் அஜித் நடிக்க ‘நேர்கொண்ட பார்வை’யாக வெளிவந்து வெற்றி பெற்றது. அப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாண் நடிக்கப் போவதாக வந்த செய்திகளை அடுத்து அவரது ரசிகர்கள் அதிகம் மகிழ்ச்சியடைந்தனர். 2019ல் பவன் நடித்து ஒரு படம் கூட வெளிவரவில்லை. அவர் அரசியலில் தீவிரமாக இறங்கி தேர்தலில் போட்டியிட்டதே அதற்குக் காரணம்.
இந்நிலையில் தெலுங்கு ரீமேக்கின் படப்பிடிப்பு திங்கள் முதல் ஆரம்பமாகி உள்ளது. அதே சமயம், படப்பிடிப்பில் பவன் கல்யாண் இருக்கும் புகைப்படங்கள், சில வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின. இதனால், பவன் கடும் கோபமடைந்தாராம். தயாரிப்பாளரையும், இயக்குனரையும் அழைத்து இனிமேல் இப்படி நடக்கக் கூடாது என்றாராம். அதனால், பாதுகாப்பை அதிகரித்து இருக்கிறார்கள்.

