ஹிந்தியில் அமிதாப்பச்சன், டாப்சி மற்றும் பலர் நடித்து வெளிவந்த ‘பின்க்’ படம் தமிழில் அஜித்குமார் நடிக்க ‘நேர்கொண்ட பார்வை’ என்ற பெயரில் ரீமேக் ஆனது. இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாண் நடிக்கப் போவதாக கடந்த சில வாரங்களாகவே செய்திகள் பரபரப்பாக வந்தன. ஆனால், இன்னும் பவன் தரப்பில் இது குறித்து தெரிவிக்கவில்லை.
இதனிடையே, இன்று படத்தின் பூஜையை எளிமையாக அலுவலகத்தில் நடத்த உள்ளார்களாம். போனிகபூருடன் இப்படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு இணைந்து தயாரிக்க உள்ளார்.
ஹிந்தியில் டாப்சி நடித்த கதாபாத்திரத்தை தமிழில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்தார். அந்தக் கதாபாத்திரத்தை தெலுங்கில் நிவேதா தாமஸ் ஏற்று நடிக்க உள்ளாராம். அரசியல் வேலைகளில் பவன் கல்யாண் பிஸியாக இருப்பதால் இன்றைய பூஜையில் கலந்து கொள்ள மாட்டார் என்கிறார்கள்.
தமிழில் வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ படத்தைத்தான் அப்படியே தெலுங்கில் ரீமேக்காகத் தயாரிக்க உள்ளார்களாம்.

