தமிழோ, மலையாளமோ இரண்டிலுமே பிக்பாஸ் போட்டியாளர்களாக கலந்து கொண்டவர்களில் ஒரு சிலரைத்தவிர மற்றவர்கள் பெரிய அளவில் பிரபலமாகதவர்கள். சினிமாவில் பல காலமாக இருந்து வந்தாலும் ஏதோ வந்துபோகும் சில காட்சிகளில் நடித்து மக்கள் மனதில் பதியாமல் இருந்த இவர்கள் இந்த நிகழ்ச்சி மூலம் நல்ல அறிமுகம் பெற்றுள்ளதை மறுக்க முடியாது.
அந்தவகையில் மலையாள பிக்பாஸ் போட்டியின் வெற்றியாளரான சாபுமோன், பலவருடங்களாக சினிமாவில் இருந்தாலும், துண்டு துக்கடா வேடங்களில் மட்டுமே தலைகாட்டி வந்தார். இந்தநிலையில் பிக்பாஸ் போட்டியின் இறுதிநாளன்று சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட இயக்குனர் லிஜோ ஜோஸ் பெள்ளிசேரியும், தயாரிப்பாளர் விஜய்பாபுவும் தங்களது படங்களில் சாபுமோனுக்கு மிக முக்கியமான கதாபாத்திரம் கொடுப்பதாக மேடையிலேயே அறிவித்துள்ளார்கள்.

