தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்க உள்ள ‘பிக் பாஸ்’ தெலுங்கு சீசன் இந்த மாதக் கடைசியில் ஒளிபரப்பை ஆரம்பிக்க உள்ளதாகத் தெரிகிறது. அதற்கான போட்டியாளர்கள் தேர்வும் நடந்து முடிந்துவிட்டது என்கிறார்கள்.
நிகழ்ச்சிக்கான சில முன்னோட்ட படப்பிடிப்புகளில் தற்போது நாகார்ஜுனா கலந்து கொண்டுள்ளதாகத் தெரிகிறது. நேற்று அவருடைய டுவிட்டர் தளத்தில் “மீண்டும் படப்பிடிப்பு தளத்தில், லைட்ஸ், கேமரா, ஆக்ஷன் ஆகியவற்றுடன்… என்ன ஒரு வாவ்… வாவ்.. எனப் பதிவிட்டுள்ளார்.
திரைப்படப் படப்பிடிப்புகள் ஆரம்பிக்க அரசுகள் இன்னும் அனுமதி அளிக்கவில்லை. டிவி தொடர்கள், நிகழ்ச்சிகள் ஆகியவற்றிற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு, அவற்றின் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன.
எனவே, பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான முன்னோட்டப் படப்பிடிப்பில் தான் நாகார்ஜுனா கலந்து கொண்டு அதன் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.