யாரும் எதிர்பாராத விதமாக பிக்பாஸ் வீட்டில் இருந்து தர்ஷன் வெளியேறினார்
பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிகட்டத்திற்கு வந்து விட்டது. இன்னும் சில தினங்களில் நிகழ்ச்சி முடிவடைய இருக்கிறது. ஏற்கனவே கடந்த வாரம் கவின் இடையிலேயே ஐந்து லட்ச ரூபாயைப் பெற்றுக் கொண்டு வெளியேறி விட்டார்.
தர்ஷன், சாண்டி, லாஸ்லியா, ஷெரீன் மற்றும் முகென் ஆகியோர் பிக்பாஸ் வீட்டில் இருந்தனர். இவர்களில் முகென் ஏற்கனவே கோல்டன் டிக்கெட் மூலம் நேரடியாக பைனலுக்கு தேர்வாகி விட்டார். மற்றவர்களின் பெயர் நாமினேசனில் இருந்தது.
இவர்களில் சாண்டியை முதலில் காப்பாற்றினார் கமல். எனவே தர்ஷன், ஷெரீன் மற்றும் லாஸ்லியா இவர்கள் மூவரில் தான் ஒருவர் வெளியேறும் சூழ்நிலை நிலவியது. பெரும்பாலும் ஷெரீன் தான் வெளியேற்றப்படுவார் என மக்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் எதிர்பாராதவிதமாக தர்ஷன் வெளியேறியது பிக்பாஸின் மற்ற போட்டியாளர்களை மட்டும் அல்ல, பார்வையாளர்களையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. குறைந்த வாக்களித்து அவர் வெளியேறியதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதன் பின்னணியில் ஏதோ இருப்பதாக பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

