விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷெராப், யோகி பாபு மற்றும் பலர் நடிக்க அட்லி இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த படம் ‘பிகில்’. இப்படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் வந்தாலும் பட வெளியீட்டிற்கு முன்பே பலரும், இன்று வரை நான்கு நாட்களுக்கு முன்பதிவு செய்துவிட்டார்கள். அதனால், அந்த விமர்சனங்கள் முன்பதிவைப் பாதிக்கவில்லை.
அதே சமயம், படத்தின் உண்மையான வெற்றி நிலவரம் நாளை முதல் தான் தெரிய வரும். இந்த நான்கு நாட்களில் இருந்ததைப் போன்ற முன்பதிவு நாளை முதல் இருந்தால் தான் படம் லாபம் தருமா, நஷ்டம் தருமா என்று முடிவு செய்ய முடியும்.
இதனிடையே, டுவிட்டரில் தங்களை சினிமா டிராக்கர்கள் என அழைத்துக் கொள்ளும் சிலர் மூன்றே நாட்களில் உலகம் முழுவதும் ‘பிகில்’ 100 கோடி வசூல் செய்துவிட்டதாகச் சொல்லி வருகிறார்கள். தயாரிப்பு நிறுவனத் தரப்பில் இருந்து இதுவரையிலும் அப்படி எதுவும் சொல்லவில்லை என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.

