விஜய்யின் ஒவ்வொரு படமும் ஏதாவது ஒரு பிரச்னையில் சிக்கி வருகிறது. அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து, தீபாவளிக்கு திரைக்கு வரும் பிகில் படம், கதை திருட்டில் சிக்கி உள்ளது. இப்படத்தின் கதை என்னுடையது என இயக்குநர் கே.பி.செல்வா என்பவர் சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். காப்புரிமை சம்பந்தப்பட்ட வழக்கும் என்பதால் ஐகோர்ட்டை நாடுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்தது.
இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார் செல்வா. இந்த வழக்கு இன்று(அக்.,15) விசாரணைக்கு வந்தது. அப்போது அட்லீ, படத்தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ்., ஆகியோர் உரிய ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, வழக்கு நாளைக்கு(அக்.,16) ஒத்தி வைக்கப்பட்டது.

