அட்லீ இயக்கத்தில் ஏஆர் ரகுமான் இசையமைப்பில், விஜய், நயன்தாரா மற்றும் பலர் நடித்து தீபாவளிக்கு வெளிவர உள்ள படம் ‘பிகில்’. இந்தப் படத்தின் அமெரிக்க வினியோக உரிமையை பிரைம் மீடியா என்ற நிறுவனம் வாங்கியுள்ளது. அதற்கான அமெரிக்கா திரையிடல் வியாபாரத்தை அந்த நிறுவனம் ஆரம்பித்துவிட்டது. அது பற்றிய அறிவிப்பை நேற்று வெளியிட்டுள்ளார்கள்.
விஜய் படங்களுக்கு அமெரிக்காவில் எப்போதுமே நல்ல வரவேற்பு இருக்கும். விஜய் நடித்து கடைசியாக வெளிவந்த ‘சர்க்கார்’ படம் அங்கு அதற்கு முந்தைய படங்களைக் காட்டிலும் அதிக தியேட்டர்களில் வெளியாகி அதிக வசூலைக் கொடுத்தது.
தற்போது ‘சர்கார்’ பட தியேட்டர் எண்ணிக்கை, வசூலை மிஞ்சும் விதத்தில் ‘பிகில்’ படத்தை அங்கு திரையிட உள்ளார்களாம்.

