நாடு முழுக்க தேர்தல் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. பார்லிமென்ட் தேர்தல் உடன் ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட நான்கு மாநில தேர்தல்களும் நடக்கின்றன. பல்வேறு மாநிலங்களில் நட்சத்திர வேட்பாளர்களும் களம் காண்கின்றனர்.
இதற்கிடையே, சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்த ஆம்பள படத்தில் நடித்தவர் மாதவி லதா. தெலுங்கில் சில படங்களில் நடித்திருக்கிறார். இவர் ஆந்திராவில் நடக்கும் சட்டசபை தேர்தலில் குண்டூர் தொகுதியில், பா.ஜ. சார்பில் வேட்பாளராக களம் காண்கின்றார்.
கர்நாடகாவில் பிறந்தவரான இவர், கடந்த ஆண்டு பா.ஜ.வில் இணைந்தார்.