தமிழில் சூர்யா நடித்து வெளியான ‘எஸ் -3’ படத்தின் இந்தி ரீமேக்கில், சன்னி தியோல் நடிக்க உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன் தகவல் வெளியானது. அதனை பாலிவுட் நடிகர் சன்னி தியோல் தற்போது உறுதி செய்துள்ளார்.
‘எஸ் -3’ படத்தைத் தமிழில் பார்த்த சன்னி தியோலுக்கு படம் மிகவும் பிடித்து விட்டதாம். அப்படத்தின் ரீமேக்கில் நடிக்க விரும்பி உள்ளார். இருப்பினும் படத்தில் ஒப்பந்தம் செய்வதற்கு முன் சன்னி தியோல், அஜய் தேவ்கனை அழைத்துப் பேசி உள்ளாராம்.தான் ‘எஸ் -3’ ரீமேக் படத்தில் நடிக்க உள்ளதாகவும், இருந்தாலும் படத்தில் எந்த இடத்திலும் ‘சிங்கம்’ என்ற பெயரை பயன்படுத்த மாட்டேன் என்றும் கூறி உள்ளாராம். இதற்கு அஜய் தேவ்கனும் ஒப்புக் கொண்டாராம்.
2011 ம் ஆண்டு இந்தியில் வெளிவந்த சிங்கம் படத்தில் அஜய் தேவ்கன் நடித்திருந்தார். இதனால் இப்படத்தில் ‘சிங்கம்’ படத்தின் சாயல் வந்துவிடக் கூடாது என்பதற்காகத் தான் அஜய் தேவ்கனிடம் முன்னரே கூறி விட்டாராம் சன்னி தியோல். ‘எஸ் -3’ படத்தின் இந்தி ரீமேக்கை ரவி கே.சந்திரன் இயக்க, ஜெயந்திலால் காடா தயாரிக்கிறார். இந்த இந்தி ரீமேக் படத்திற்கும் ‘எஸ் -3’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. சன்னி தியோல் தற்போது நடித்து வரும் ‘போஸ்டர் பாய்ஸ்’ படம் வரம் செப்டம்பர் 8-ம் தேதி ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.