சிருங்காரம் தமிழ் படத்தில் அறிமுகமாகி பின்னர் பாலிவுட்டில் பிசியான நடிகை ஆனவர் அதிதிராவ். காற்றுவெளியிடை படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்தார். அதன் பிறகு செக்க சிவந்த வானம், சைக்கோ படங்களில் நடித்த அவர் தற்போது ஹாய் சினாமிகா, துக்ளக் தர்பார் படங்களில் நடித்து வருகிறார்.
பாலிவுட்டில் அவர் நடித்துள்ள தி கேர்ள் ஆன் தி டிரைன் படம் விரைவில் வெளிவர இருக்கிறது. இதில் அவர் இரண்டாவது நாயகியாக நடித்துள்ளார். படத்தின் ஹீரோயின் ப்ரீணிதி சோப்ரா. பாலிவுட்டில் 2 வருடங்களுக்கு பிறகு அவர் நடித்திருக்கும் படம் இது.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: இப்போது நான் தென்னிந்திய படங்களில் அதிக கவனம் செலுத்தி வருவதால் இந்தி வாய்ப்புகள் குறைவாக உள்ளது. இதற்காக நான் பாலிவுட்டையே காலி செய்து விட்டு சென்றது போல பேசுகிறார்கள். நல்ல படங்கள் எந்த மொழியில் கிடைத்தாலும் நடிப்பேன். மொழி பேதமெல்லாம் கிடையாது.
பத்மாவதி படத்தில் சிறிய கேரக்டரில் நடித்தேன். சஞ்சய் லீலா பன்சாலி என்னை அந்த படத்தில் நடிக்க அழைத்தபோது சிறிய கேரக்டர்தான் ஆனால் இது பேசப்படும் என்றார். அவர் நம்பிக்கையும், எனது நடிப்பும் வீண்போகவில்லை. மெஹருன்னிசா கேரக்டர் பேசப்பட்டது. படங்கள் குறைவாக இருந்தாலும் 5 மொழிகளில் நடிக்கிற நடிகை என்கிற பெருமை எனக்கு இருக்கிறது. என்கிறார் அதிதிராவ்.