பாலிவுட் திரையுலகத்தில் சமீப காலமாக நடக்கும் விஷயங்கள் அதிர்ச்சியூட்டும் வகையில்தான் இருக்கின்றன. தன்னை விட 11 வயது குறைவான அமெரிக்கப் பாடகரை மணக்க உள்ளார் பிரியங்கா சோப்ரா. அடுத்து தன்னை விட 11 வயது குறைவான நடிகர் அர்ஜுன் கபூரை, மலாய்கா அரோரா காதலிப்பதாக செய்திகள் வெளிவந்தன. அர்ஜுனுக்கு 33 வயதும், மலாய்காவிற்கு 45 வயதும் ஆகிறது. நடிகர் அர்ஜுன் கபூர், ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூருக்கும், போனியின் முதல் மனைவி மோனாவுக்கும் பிறந்தவர்.
அர்ஜுன், மலாய்கா இருவரும் சேர்ந்து மும்பையில் ஒரு பிளாட் வாங்கியிருப்பதாகவும், அதில்தான் இருவரும் சேர்ந்து வசிக்கப் போவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. இதனிடையே, மலாய்கா புதிதாக எம்எ என்ற செயின் ஒன்றைப் போட்டிருந்த புகைப்படத்துடன் தோற்றமளித்தார். அது மலாய்கா, அர்ஜுன் என்று அர்த்தம் கொள்ளப்பட்டு சமூக வலைத்தளங்களில் பரபரப்பாகியது. ஆனால், அது தன்னுடைய பெயரான மலாய்கா அரோரா என்று தான் என மலாய்கா தெரிவித்துள்ளார்.
சமீபத்திய டிவி நிகழ்ச்சியில் அர்ஜுன், தான் இனி சிங்கிள் இல்லை என்று சொல்லியிருப்பதும் கவனிக்கத்தக்கது. மலாய்கா, நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் அர்பாஸ் கானை 1998ல் திருமணம் முடித்து 2016ல் விவாகரத்து செய்துவிட்டார்.