உலகம் முழுக்க பிரபலமான MeToo, இந்தியாவிலும் பிரபலமாகி, பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பல பெண்கள், பல பிரபலங்களின் முகங்களை தோலுரித்து வருகின்றனர். அந்தவகையில் தமிழ் சினிமாவில் வைரமுத்து, ராதாராவி, ஜான் விஜய், கல்யாண் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்களின் பெயர்கள் இந்த புகாரில் சிக்கி உள்ளனர்.
இந்நிலையில், ராட்ச்சன் படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சியில் நடிகை அமலாபால் பேசியதாவது : சமூக வலைதளங்களில் நிகழும் MeToo மிக முக்கியமானது. நான் ஆதரிக்கிறேன். சினிமாவில் மட்டும் இல்லை, எல்லா துறையில் பாலியல் துன்புறுத்தல் இருக்கிறது. கொஞ்ச காலத்திற்கு முன்னர் எனக்கு பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்தபோது தைரியமாக வெளியில் சொன்னேன். அதேப்போன்று எல்லா பெண்களும் தைரியமாக வெளியில் சொல்ல முன் வர வேண்டும் என்றார்.