விக்ரம் நடித்த சேது படத்தில் இயக்குனரானவர் பாலா. அந்த படம் தான் விக்ரமிற்கு திருப்புமுனையாக அமைந்தது. அதனால் தனது மகன் துருவ் விக்ரம் நடிக்கும் முதல் படத்தையும் பாலாவே இயக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட விக்ரம், அர்ஜூன் ரெட்டி தமிழ் ரீமேக்கான வர்மா படத்தை பாலாவை இயக்க வைத்தார்.
ஆனால் அந்த படத்தை எடுத்து முடித்த நேரத்தில் படத்தின் மீது திருப்தி இல்லை என்று வர்மாவை தயாரித்த நிறுவனம் கிடப்பில் போட்டது. அதையடுத்து மீண்டும் ஆதித்ய வர்மா என்ற பெயரில் அந்த படத்தை வேறு இயக்குனரை வைத்து தயாரித்து வெளியிட்டது.
இதனால் தேசிய விருது இயக்குனரான பாலா மனதளவில் நொடிந்து போனார். இருப்பினும் தனது அடுத்த படத்தை மல்டி ஸ்டார் படமாக இயக்கப்பேகிறார். இந்த படத்தில் ஆர்யா, அதர்வா நடிக்கும் நிலையில் தற்போது பாலாவின் நந்தா, பிதாமகனில் நடித்த சூர்யாவும் ஒரு கெஸ்ட் ரோலில் நடிப்பதாக தற்போது புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

