திறமையான நடிகை தான் என்றாலும் நடிகை பார்வதி சமீபகாலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் தடுமாறி வருகிறார். தற்போது ‘உயரே’ என்கிற படத்தை முடித்துவிட்ட பார்வதியின் கைவசம், ‘வைரஸ்’ என்கிற படம் மட்டுமே உள்ளது.. ஒரு காலத்தில் செலக்டிவாக படங்களை ஒப்புக் கொண்டு நடித்துவந்த இவரை, தற்போது மலையாள திரையுலகமே செலக்டிவாக ஒதுக்கி வைத்துள்ளது என்றுகூட சொல்லலாம்..
கருத்து சுதந்திரம் என்கிற பெயரில் மோகன்லால் மற்றும் மம்முட்டியுடன் பார்வதி மேற்கொண்ட மோதல் போக்கு தான் இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தேசிய விருது பெற்ற இயக்குனர் சிவா, தான் இயக்கவுள்ள புதிய படத்திற்கு பார்வதி தான் பொருத்தமானவராக இருப்பார் என்பதால் அவரைத் தேடிச்சென்று தனது அடுத்த படத்தின் கதாநாயகி வாய்ப்பு வழங்கியுள்ளார். இவரைப் போன்ற இயக்குனர்கள் இருக்கும் வரை தனது சினிமா வண்டி சீராக ஓடிக்கொண்டிருக்கும் என தைரியமாக இருக்கிறாராம் பார்வதி.

