ஊரடங்கு சமயத்தில் படப்பிடிப்பு, திரைப்பட விழாக்கள் என எதுவும் இல்லாததால் திரையுலக நட்சத்திரங்கள் பொழுது போக்குவதற்காக ரொம்பவே சிரமப்பட்டு வருகின்றனர். அதனால் வீட்டில் இருந்தபடியே வித்தியாசமாக எதையாவது செய்து, அதனை சோஷியல் மீடியாக்களில் பதிவிட்டு வருகின்றனர்.
அந்தவகையில் மலையாள சினிமாவின் இளம் ஹீரோவும் தனுஷின் மாரி-2 படத்தில் வில்லனாக நடித்தவருமான டொவினோ தாமஸ் கையில் ஒரு சிறிய பாம்பை சுற்றியபடி போஸ் கொடுத்துள்ள வீடியோ ஒன்றை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.. தனது வீட்டு தோட்டத்திற்குள் வழிதவறி வந்த பாம்பை கையில் பிடித்து விளையாடியபடி தான் இப்படி போஸ் கொடுத்துள்ளாராம் டொவினோ தாமஸ்.