ஏ.ஆர்.ரகுமான், ஷங்கர் கூட்டணியில் 2010ம் ஆண்டு வெளிவந்த ‘எந்திரன்’ படத்தில் தான் மதன் கார்க்கி ‘இரும்பிலே ஒரு இருதயம்…’ பாடலை எழுதி பாடலாசிரியராக அறிமுகமானார். பொதுவாக, தங்கள் படம் வெளிவந்த நாளைத்தான் அனைவரும் முதல் பதிவாக வைத்துக் கொண்டாடுவார்கள். ஆனால், மதன் கார்க்கி பாடல் எழுதிய நாளைத்தான் தன்னுடைய முதல் பதிவாகக் குறிப்பிடுகிறார்.
“பத்து ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில், முன்பு அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விளையாட்டு அரங்கில் அமர்ந்து ‘எந்திரன்’ படத்திற்காக ‘இரும்பிலே…’ பாடலை எழுதினேன். 250 படங்கள் 750 பாடல்கள், உங்கள் வாழ்த்தும், அன்பும் வழிகாட்டலும் இல்லாமல் இது சாத்தியமில்லை. உங்களுக்கு நன்றி சொல்லி என் பயணம் தொடர்கின்றன,” என்று தன்னுடைய 10 ஆண்டு திரையுலகப் பயணம் பற்றி மதன் கார்க்கி நன்றிக் கடிதம் எழுதியிருக்கிறார்.
தற்போதும் எண்ணற்ற பாடல்களை எழுதிக் கொண்டு முன்னணி பாடலாசிரியர்களில் ஒருவராக மதன் கார்க்கி இருக்கிறார்.
