ராஜமவுலி இயக்கிய பாகுபலி, பாகுபலி-2 ஆகிய படங்கள் உலக அளவில் இந்திய படங்களுக்கு அங்கீகாரம் பெற்றுத்தந்தவை. இந்த படங்களைத் தொடர்ந்து, தற்போது ஜூனியர் என்டிஆர், ராம் சரணை வைத்து ஆர்ஆர்ஆர் என்றொரு படத்தை இயக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார் ராஜமவுலி.
இந்நிலையில், பாகுபலியில் தான் படமாக்கிய கதைக்கு முன்பு நடந்த விசயங்களை மூன்று பாகங்களாக உருவாக்கி படம் இயக்கப்போகிறாராம். அந்த படத்தை ராஜமவுலியுடன் இணைந்து தேவகட்டா என்பவரும் இயக்குகிறாராம்.
நெட்பிளிக்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில், பாகுபலி படத்தில் இடம்பெற்ற பாகுபலி, தேவசேனா, சிவகாமி, கட்டப்பா போன்ற முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்களின் முந்தைய காலக்கட்டத்து கதை இடம்பெறப்போகிறதாம்.
இந்த தொடர் கதையில் பாகுபலியில் நடித்தவர்களே நடிக்கிறார்களா? இல்லை வேறு நடிகர்கள் நடிக்கிறார்களா? என்பது தெரிவிக்கப்படவில்லை.
