பருத்தித்துறை நகர் வர்த்தக தொகுதியில் மேலும் 7 வர்த்தகர்களுக்கு தொற்று உள்ளமை நேற்றைய பரிசோதனைகளில் கண்டறியப்பட்ட நிலையில் அவர்களில் 6 பேர் தலைமறைவாகியுள்ளனர்.
அவர்கள் அனைவரும் புத்தளம் மற்றும் காத்தான்குடியைச் சேர்ந்தவர்கள் என்பதால் காவற்துறையினர் ஊடாக அவர்களைக் கைது செய்ய சுகாதாரத் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பருத்தித்துறை நகர் வர்த்தக தொகுதியில் 23 பேரிடம் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 7 வர்த்தகர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று வெள்ளிக்கிழமை கண்டறிப்பட்டுள்ளது.பருத்தித்துறை நகர் முடக்கப்பட்டு வங்கிகள் மட்டும் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட அனுமதிக்கப்பட்டது.
இந்த நிலையில் பருத்தித்துறை நகர் வர்த்தக தொகுதியில் 23 பேரிடம் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 7 வர்த்தகர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.