துரை செந்தில்குமார் இயக்கத்தில், தனுஷ், சினேகா, மெஹ்ரின் மற்றும் பலர் நடித்த ‘பட்டாஸ்’ படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 15ம் தேதியன்று வெளியானது. தனுஷ், இதற்கு முன் நடித்து வெளிவந்த ‘அசுரன்’ படம் வசூல் ரீதியாக பெரிய வெற்றியைப் பெற்றதால் இந்தப் படத்தின் வியாபாரமும் அமோகமாக நடைபெற்றது.
ஒரு பக்கம் ‘தர்பார்’ போட்டியை சமாளித்துக் கொண்டு ‘பட்டாஸ்’ படம் வசூலில் கொஞ்சம் தடுமாறிக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மையான நிலவரம் என்கிறார்கள். படம் வெளியான முதல் நாளில் சுமார் சுமார் 5 கோடியும், இரண்டாவது நாளில் 3.3 கோடி, மூன்றாவது நாளில், 2.6 கோடி, நேற்று 3 கோடி என கடந்த நான்கு நாள் வசூலாக 13.9 கோடியை வசூலித்துள்ளது.
இன்றும் விடுமுறை நாள் என்பதால் சுமார் 3 கோடி வரை வசூல் கிடைக்கலாம் என்கிறார்கள். ஆக, 5 நாட்களில் 17 கோடி வரையிலான வசூல் இந்தப் படத்திற்கு லாபமாகரமான வசூலாகவே அமையுமாம்.

