அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம் என சமீபகாலமாக தெலுங்கில் வசூல் நாயகனாக வலம் வரும் விஜய் தேவரகொண்டா, நேரடியாக தமிழ் பேசி நடித்துள்ள நோட்டா வரும் அக்டோபர் 5ம் தேதி வெளியாக உள்ளது. அரிமா நம்பி, இருமுகன் பட இயக்குனர் ஆனந்த் சங்கர் தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.
ஆனால் முதலில் இந்தப்படம் அல்லு அர்ஜுனுக்குத் தான் சென்றதாம். ஆனால் இந்த கதை தனக்கு செட்டாகாது என கூறி நிராகரித்துவிட்டாராம் அல்லு அர்ஜுன். ஏற்கனவே ஸ்பைடரில் மகேஷ்பாபு சறுக்கியது, தான் நடித்த ‘என் பெயர் சூர்யா’வும் தமிழில் வரவேற்பை பெறாதது என சில தயக்கங்கள் அவரை இந்த படத்தை ஒப்புக்கொள்ள விடாமல் செய்துவிட்டனவாம்.
ஒருவேளை ‘நோட்டா’ ரசிகர்களை கவர்ந்துவிட்டால் அல்லு அர்ஜுனுக்கு தமிழில் கால் பதிக்க கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பு கைவிட்டு போனதாகத்தான் அர்த்தம்.