ரஜினி இரண்டு வேடங்களில் நடித்த படம் நெற்றிக்கண். எஸ்.பி.முத்துராமன் இயக்கிய இந்த படத்திற்கு டைரக்டர் விசு, கதை வசனம் எழுதியிருந்தார். ரஜினியுடன் லட்சுமி, மேனகா உள்பட பலர் நடித்திருந்தனர். கவிதாலயா நிறுவனம் தயாரித்திருந்தது.
இதன் ரீ-மேக்கில் தனுஷ் நடிப்பதாக செய்தி பரவியது. இதற்கு விசு எதிர்ப்பு தெரிவித்தார். கவிதாலயா நிறுவனமும் பதில் தந்திருந்தது. இந்நிலையில் இதுப்பற்றி விசுவிடம் போனில் தொடர்பு கொண்ட தனுஷ், நெற்றிக்கண் ரீ-மேக்கில் நடிக்கும் எந்த எண்ணமும் இல்லை என தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

