ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதிப் பங்களிப்பில் நெடுந்தீவில் முன்னெடுத்த திட்டங்கள் தொடர்பிலும் எதிர்காலத்தில் மேற்கொள்ளத் திட்டமிடப்படும் திட்டங்கள் தொடர்பில் தெடுந்தீவிற்கு நேரில் பயணித்த ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவிப் பணிப்பாளர் சென்சாய் சாங் தலமையிலான குழுவினர் நேரில் ஆய்வில் ஈடுபட்டனர்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியில் கட்டப்பட்ட நெடுந்தீவுப் பிரதேச செயலகம் , பிரதேச செயலகத்திற்கான 3 விடுதிகள் மற்றும் நெடுந்தீவிற்கான கடல் நீர் சுத்திகரிப்புத் திட்ட ஆரோப் பிளாட் என்பனவற்றை நேரில் பார்வையிட்டனர். அதனைத் தொடர்ந்து நெடுந்தீவுப் பிரதேச செயலாளர் தலமையில் நெடுந்தீவு மக்கள் பொது அமைப்புக்களையும் நேரில் சந்தித்து தீவிற்கான தேவைகள் தொடர்பில் கேட்டறிந்தனர்.
இதன்போது நெடுந்தீவில் தற்போது 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உள்ளபோதிலும் சுமார் 2 ஆயிரத்து 500 மக்களின் நீர்த்தேவையைகூட தற்போது உள்ள ஆரோ பிளாட்டினால் பூர்த்தி செய்ய முடியவில்லை. எனவே இதேபோன்று மற்றுமோர் நீர் சுத்திகரிப்பு இயந்திரமும் , நெடுந்தீவின் உள்ளக வீதிகள் பல நீண்டகா சீரமைப்பு இன்றிக் கானப்படுவத்தோடு நெடுந்தீவில் உள்ள ஒரேயொரு வைத்தியசாலையிலும் பல தேவைகள் கானப்படுகின்றன. எனவே அவற்றினையும் ஆசிய அபிவிருத்தி வங்கி நிவர்த்தி செய்து தர வேண்டும். எனக்கோரிக்கை விடுத்தனர்.
இவற்றினை நேரில் பார்வையிட்ட ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் இவை தொடர்பில் மாவட்டச் செயலாளருடன் இவை தொடர்பில் கலந்துரையாடி நெடுந்தீவு மக்களின் முழுமையான நீர்த்தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மற்றுமோர் ஆரோ பிளாட் அமைத்துக் கொடுக்க முயற்சிக்கப்படும் எனத் தெரிவித்ததாக மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.