மன்மதன் படத்தில் சற்றே நெகட்டிவ்வான கேரக்டரில் நடித்தார் சிம்பு. அதன்பிறகு பல வருடங்களுக்குப் பிறகு வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ள மாநாடு படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கிறார்.
அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரிப்பில் தற்போது ‘பார்ட்டி’ படத்தை இயக்கியுள்ளார் வெங்கட்பிரபு. ஜெய், ஷாம், சத்யராஜ், ஜெயராம், சிவா, சந்திரன், நாசர், சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், ரெஜினா, சஞ்சிதா ஷெட்டி, நிவேதா பெத்துராஜ் நடித்துள்ள இந்தப் படம் முழுவதும் பிஜி தீவில் படம்பிடிக்கப்பட்டுள்ளது. கேங்ஸ்டர் சம்மந்தப்பட்ட காமெடிப் படமான இந்தப்படம் ரிலீஸுக்குத் தயாராக இருக்கிறது.
இந்தப் படத்துக்குப் பிறகு வெங்கட்பிரபு இயக்கும் ‘மாநாடு’ படத்தில்தான் சிம்புவுக்கு நெகட்டிவ் கேரக்டர். கார்த்திக் நடிப்பில் பல வருடங்களுக்கு முன் வெளியான ‘சொர்ணமுகி’ படத்தில் பார்த்திபன் நடித்த கேரக்டரைப்போல் மாநாடு படத்தில் சிம்புவின் கேரக்டர் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
இந்தப் படம் சிம்புவின் நடிப்புத்திறமைக்கு தீனிபோடும்வகையில் இருக்கும் என்கிறார் வெங்கட்பிரபு.

