நிவின்பாலி நடிப்பில் மலையாளத்தில் உருவாகியுள்ள மைக்கேல் படம் நாளை(ஜன.,18) ரிலீசாக இருக்கிறது.. இந்த கொண்டாட்டத்துடன் சேர்ந்து, அவர் தற்போது நடித்து முடித்துள்ள ‘மூத்தோன்’ என்கிற படத்தின் டீசரை இன்று(ஜன.,17) வெளியிடுகிறார்கள். இந்த படத்தை நடிகையும், இயக்குனருமான கீது மோகன்தாஸ் இயக்கியுள்ளார்.
இந்த படம் மலையாளம் மற்றும் ஹிந்தி என இரண்டு மொழிகளில் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் டீசரை வெளியிடுவதில் பிரம்மாண்டம் காட்டியுள்ளார்கள் படக்குழுவினர். ஹிந்தி டீசரை பிரபல இயக்குனர்கள் அனுராக் காஷ்யப் மற்றும் கரண் ஜோஹர் வெளியிடுகிறார்கள்.
அதேப்போல, நடிகர் பிருத்விராஜ் மற்றும் சூர்யா இருவரும் இந்த படத்தின் மலையாள டீசரை வெளியிடுகிறார்கள். இன்று மாலை ஆறு மணி அளவில் ஒரே நேரத்தில் இந்த டீசர்கள் வெளியாக இருக்கின்றன. இந்த படத்தின் இந்தி வசனத்தை இயக்குனர் அனுராக் காஷ்யப் எழுதியுள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

