இன்று மலையாள சினிமாவில் இளம் முன்னணி நாயகனாக விளங்கும் நிவின்பாலி, நாளை வெளியாகவிருக்கும் ரிச்சி படம் மூலம் தமிழிலும், அதேபோல ஒரு இடத்தை பிடித்துவிடலாம் என நினைக்கிறார். சமீபத்தில், சினிமாவுக்குள் தான் நுழைந்த விதம் பற்றி கூறியுள்ள நிவின்பாலி, சினிமாவில் நடிக்க வேண்டும் என கூறியவுடன் அவரது பெற்றோர் அதற்கு தடை விதித்தனராம்.
ஆனால் நிவின்பாலி பிடிவாதமாக இருக்கவே, அவரது மனதை மாற்றும் விதமாக இரண்டு வருடங்கள் வேறு ஏதாவது வேலைக்கு சென்று அனுபவங்களை பெறுமாறும், அதன்பின் வேண்டுமானால் சினிமாவுக்குள் நுழையலாம் என்றும் கூறினார்களாம்.. ஆனால் சரியாக இரண்டு வருடம் கழிந்ததும் ஒருநாள் கூட தாமதிக்காமல் வேலையை ராஜினமா பண்ணிவிட்டு வந்து நின்றாராம். சினிமா மீது அவர் கொண்டுள்ள தீவிரத்தைக்கண்டு வேறுவழியின்றி அவருக்கு சம்மதம் தெரிவித்தார்களாம்.