‛அருவி’ படம் மூலம் தனது நடிப்பால் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் அந்த படத்தில் கதாநாயகியாக நடித்த அதிதி பாலன். அதற்கு பிறகு தமிழில் எந்த படமும் ஒப்புக் கொள்ளாமல் இருந்தார். தற்போது மலையாளத்தில் நிவின்பாலி ஜோடியாக படவேட்டு என்கிற படத்தில் நடித்து வருகிறார்.
இந்தநிலையில் மீண்டும் ஒரு மலையாள படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் அதிதி மேனன். இந்தப்படத்தில் குஞ்சாக்கோ போபன் கதாநாயகனாக நடிக்கிறார். தமிழில் சரத்குமார் சேரன் நடித்த ஒரு நாள் இரவில் என்கிற படத்தை இயக்கிய ஷாகித் காதர் தான், இந்த படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்தில் முதலில் கதாநாயகியாக நடிக்க நித்யா மேனன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால் சில காரணங்களால் தற்போது நித்யா மேனனுக்குப் பதிலாக அந்த கதாபாத்திரத்தில் நடிக்க அதிதி பாலன் ஒப்பந்தம் செய்யப்பட்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

