விஜய்யை வைத்து சர்கார் படத்தை இயக்கிய முருகதாஸ், அந்தப்படம் ரிலீஸின் போதும், ரிலீஸ்க்கு பின்னரும் ஏகப்பட்ட பிரச்னைகளை சந்தித்தார். கதைத்திருட்டு, ஆளும் கட்சியின் எதிர்ப்பு என சர்கார் அவரை ஒருவழியாக்கிவிட்டது.
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினியை வைத்து முருகதாஸ் படம் இயக்க உள்ளார். இதுப்பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. ஆனாலும் அந்தப்படம் பற்றிய செய்திகள் தினமும் வெளியான வந்த வண்ணம் உள்ளன.
ரஜினி – முருகதாஸ் இணையும் படம், அரசியல் சம்பந்தப்பட்ட கதை என்பதால் அந்தப்படத்திற்கு நாற்காலி என தலைப்பு வைத்திருப்பதாக செய்திகள் வந்தன. இந்நிலையில் முருகதாஸ் இதை மறுத்துள்ளார்.
டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது : “என்னுடைய அடுத்தப்படத்தின் தலைப்பு நாற்காலி அல்ல, தயவு செய்து வதந்திகளை நிறுத்துங்கள்” என பதிவிட்டிருக்கிறார்.

