நடிகரும், மக்கள் நீதி மையம் தலைவருமான கமல்ஹாசன், சென்னையில் தனியார் கல்லூரி ஒன்றில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். அவர் பேசும்போது, தமிழகம் ஒரு பெரும் சோதனையில் ஈடுபட போகிறது. அதில் உங்களின் முக்கிய பங்கு இருக்க வேண்டும். தக்கை தமிழ்நாடு முழு உருவம் பெறுவதற்கான பெரும் அலை உருவாகி உள்ளது. அது தான் முதல்முறையாக வாக்களிப்பவர்கள்.
தமிழகம் முன்னேற இளைஞர்கள் சீர்திருத்தம் செய்ய முன்வர வேண்டும். தமிழக அரசியலில் முதலில் ஊழல் ஒழிக்கப்பட வேண்டும். நாற்காலி கிடைத்ததும் மக்களை புறம் தள்ளாமல் மக்களுக்காக, மக்கள் நலனுக்காக அரசு செயல்பட வேண்டும். நாம் பிச்சைக்காரன் கிடையாது. ஓட்டுக்காக பணம் பெற மாட்டோம் என அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து மாணவிகளின் கேள்விகளுக்கு பதிலளித்த கமல் : ஓட்டளிப்பது உங்கள் முதலீடு. எனவே கவனமாக வாக்களியுங்கள். சின்னங்களை பார்த்து ஓட்டு போடாதீர்கள். மக்கள் நலனுக்காக எந்த கட்சி பாடுபடுகிறதோ அதை தேர்ந்தெடுங்கள். நிச்சயம் மக்கள் நீதி மையம் அதில் இடம்பெறும்.

