பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் தமிழில் சூப்பர் ஹிட்டான பாடம் 96. இத்திரைப்படம் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் ஆகியுள்ளது. தெலுங்கில் ஜானு என்ற தலைப்பில் ரீமேக் செய்யப்பட்ட இப்படத்தில் சர்வானந்த், சமந்தா நடித்தனர். இந்த படத்தையும் பிரேம்குமார் தான் இயக்கினார்.
ஆனால் தெலுங்கில் இப்படம் ஒர்க்கவுட் ஆகவில்லை. இதையடுத்து தெலுங்கு ரசிகர்கள் சமந்தாவை பிளாப் (தோல்வி) ஹீரோயின் என அழைக்க தொடங்கினர். இதுகுறித்து பேட்டி ஒன்றில் நடிகை சமந்தா ஆதங்கப்பட்டுள்ளார்.
“ஒரு பெரிய ஹீரோ தொடர்ந்து மூன்று பிளாப் படங்கள் கொடுத்தாலும், அவரது நான்காவது படத்தை ரசிகர்கள் சென்று பார்ப்பர். அவர்களுக்கு அவர்களுடைய ஹீரோ திரையில் வந்தாலே போதும். ஆனால் துரதர்ஷ்டவசமாக அவர்கள் எல்லோரும் ஹீரோயின் மீது தான் பழிபோடுவர்.
ஒரு படத்தில் ஹீரோயின் எவ்வளவு உழைத்தாலும் அது பெரிதாக பேசப்படுவது இல்லை. ஆனால் ஒரு பெரிய ஹீரோ சும்மா நடந்து வந்தாலே போதும். ரசிகர்கள் கொண்டாடி தீர்த்துவிடுகிறார்கள்”, என சமந்தா கூறினார்.

