Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Politics

நாடளாவிய ரீதியில் நான்கு மணி நேர பொலிஸ் நடவடிக்கை

July 13, 2017
in Politics
0
நாடளாவிய ரீதியில் நான்கு மணி நேர பொலிஸ் நடவடிக்கை

நாட­ளா­விய ரீதியில் நேற்று முன்­னெ­டுக்­கப்பட்ட நான்கு மணி நேர விசேட பொலிஸ் நட­வ­டிக்­கை­களில் பல்­வேறு குற்றங்கள் தொடர்பில் கைது செய்­யப்­பட்டு பொலி­ஸாரால் தேடப்­பட்ட 110 பேரும் நீதி­மன்­றங்­களால் பிடி­யாணை பிறப்­பிக்­கப்­பட்ட 772 பேரும் கைது செய்­யப்பட்­ட­தாக பொலிஸ் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான ருவன் குண­சே­கர தெரி­வித்தார். நேற்று அதி­காலை 1.00 மணி முதல் அதி­காலை 5.00 மணி வரை நான்கு மணி நேரங்கள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர

வின் ஆலோ­ச­னைக்கு அமைய பிராந்­தி­யங்­களின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதி­பர்கள், பிரதிப் பொலிஸ் மா அதி­பர்கள் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சர்­களின் நேரடிக் கட்­டுப்­பாட்டில் சுமார் 14 ஆயிரம் பொலிஸார் கட­மையில் ஈடு­ப­டுத்­தப்பட்டு இந்த விசேட நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்பட்­டது. இதன் போதே இவர்கள் கைது செய்­யப்பட்­டுள்­ளனர்.

இந்த கைது­க­ளுக்கு மேல­தி­க­மாக இந்த நான்கு மணி நேரங்­க­ளுக்குள் 22210 மில்லி கிராம் ஹெரோ­யினும் 40428.82 மில்லி கிராம் கஞ்­சாவும் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளது. ஹெரோயின் தொடர்பில் 85 வழக்­கு­களும் கஞ்சா தொடர்பில் 264 வழக்­கு­களும் இதன் போது பொலி­ஸாரால் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன.

இத­னை­விட சட்டவிரோத மது­பானம் 37084 லீற்றர்களை இதன் போது கைப்­பற்­றி­யுள்ள பொலிஸார் இது தொடர்பில் 221 வழக்­கு­க­ளையும் பதிவு செய்­துள்­ளனர்.

அத்­துடன் மணல் அகழ்வு, ஏற்றிச்செல்லல், பொது இடத்தில் குடி போதை­யுடன் அநா­க­ரி­க­மாக செயற்­படல், பாதை­களில் கழி­வு­களை கொட்­டுதல் தொடர்பில் 124 வழக்­கு­க­ளையும், கைப்­பற்­றி­யுள்ள பொலிஸார் சட்ட விரோத ஆயு­தங்கள் மூன்­றி­னையும் பொலிஸார் கைப்­பற்­றி­யுள்­ளனர்.

கைக் குண்­டொன்றும் இதன் போது பொலி­ஸாரால் கைப்­பற்­றப்­பட்­டுள்ள நிலையில், குடி போதையில் வாகனம் செலுத்­திய 368 பேருக்கு எதி­ராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அனுமதிப் பத்திரம் இன்றி வாகனம் செலுத்திய 320 பேருக்கு எதிராகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

சம்­பந்­தனும் விக்­கி­னேஸ்­வ­ரனும் இந்­துக்­க­ளாயின் தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களை பேச வேண்டும்

Next Post

அர­சாங்கம் மேற்­கொள்ளும் முறை­யற்ற நட­வ­டிக்­கை­க­ளுக்கு எதி­ராக சம்பந்தன் அழுத்தம் கொடுக்க வேண்டும்

Next Post
அர­சாங்கம் மேற்­கொள்ளும் முறை­யற்ற நட­வ­டிக்­கை­க­ளுக்கு எதி­ராக  சம்பந்தன்  அழுத்தம் கொடுக்க வேண்டும்

அர­சாங்கம் மேற்­கொள்ளும் முறை­யற்ற நட­வ­டிக்­கை­க­ளுக்கு எதி­ராக சம்பந்தன் அழுத்தம் கொடுக்க வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures