Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sports

“நாங்ககூடதான் டேபிள் டென்னிஸ் ஆடுவோம்னு ஏளனமா சொல்வாங்க!’’ – காமன்வெல்த் சாம்பியன் சத்யன்

May 15, 2018
in Sports
0

ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் மூன்று பதக்கங்களுடன் திரும்பியிருக்கிறார் தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் ஞானசேகரன். கலந்துகொண்ட நான்கு பிரிவுகளில் மூன்று பதக்கங்கள் வென்று அசத்தியிருக்கிறார் இந்த 25 வயது இளைஞர். இந்த வெற்றிகள் ஒன்றும் ஆச்சர்யம் கிடையாது. ஏனெனில், சத்யன் ஆஸ்திரேலியாவுக்குப் பயணப்படும் முன்னரே பல பதக்கங்கள் எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில், அவர்தான் இந்தியாவின் நம்பர் 1 டேபிள் டென்னிஸ் பிளேயர். காமன்வெல்த் ஆண்கள் குழுப் பிரிவில் நைஜீரியாவை வீழ்த்திய இந்திய அணியின் ஸ்டார் பிளேயர் சத்யன். ஒற்றையர் பிரிவின் கால் இறுதியில் சறுக்கியவர், இரட்டையர், கலப்பு இரட்டையர் பிரிவுகளில் பட்டையைக் கிளப்பி வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களைக் கைப்பற்றி அசத்தினார். இந்த வயதில் `இந்தியாவின் நம்பர் 1′ வீரர் அந்தஸ்து, மூன்று காமன்வெல்த் பதக்கங்கள் எனப் பயணிக்கும் சத்யனின் உழைப்பு அசாத்தியமானது!

கடந்த நவம்பர் மாதம் நடந்த மிகப்பெரிய டேபிள் டென்னிஸ் தொடரான ஸ்பேனிஷ் ஓப்பனை வென்றார் சத்யன். சர்வதேச ப்ரோ தொடர்களை வெல்வது என்பது எளிதல்ல. அதுவும், ஐபிஎல் போல் டேபிள் டென்னிஸுக்கு லீக் நடத்தும் ஐரோப்பாவில், ப்ரோ தொடரை வெல்வது அபூர்வம். அதை அநாயாசமாகச் செய்துமுடித்தார் சத்யன். ஆனால், அந்த வெற்றி பெரிய ஆச்சர்யமாகப் பார்க்கப்படவில்லை. ஏனெனில், தன் பெல்ஜியம் ஓப்பன் வெற்றியின் மூலம் ஓராண்டுக்கு முன்னரே அனைவரின் புருவங்களையும் உயர்த்தியவர். அந்த டேபிளின் முன் எப்படியான அதிர்ச்சிகளைத் தன்னால் ஏற்படுத்த முடியும் என்பதை உணர்த்தியவர்.

8 வயதில் தமிழக `அண்டர் 12′ அணிக்கு விளையாடத் தொடங்கிய சத்யன், 12 வயதில் இந்தியாவுக்காகக் களம் கண்டுவிட்டார். 2008 இளைஞர் காமன்வெல்த் போட்டியில் தங்கம், 2010 ஜூனியர் ஆசிய விளையாட்டில் வெண்கலம் என தன் ஆரம்ப காலத்திலேயே சர்வதேச அளவில் பல வெற்றிகளைக் குவித்தார். இவரது திறமையைக் கண்ட பயிற்சியாளர்கள், ஜூனியர் காலகட்டத்திலேயே சீனியர் பிரிவில் விளையாடச் செய்தனர். சத்யன் மீது அவ்வளவு நம்பிக்கை.

12-ம் வகுப்பு முடிக்கும் வரை எல்லாம் நல்லபடியாகவே இருந்தன. அதன் பிறகு ஒவ்வொரு பெற்றோருக்கும் ஏற்படும் பயம் சத்யனின் பெற்றோருக்கும் ஏற்பட, பொறியியல் படிப்பில் சேர்க்கப்பட்டார். 4:30 மணிக்கு எழுந்து ஒரு மணி நேரம் ஃபிட்னஸ் பயிற்சி. 6 மணிக்கு கல்லூரிப் பேருந்தில் பயணம். மீண்டும் மாலை 4:30 மணியிலிருந்து 8 மணி வரை பயிற்சி என அவரின் பயிற்சி நேரமும் முறையும் மாறின. இவற்றுக்கு மத்தியில் வெறும் ஐந்து மணி நேரம் மட்டுமே தூக்கம். ஒரு விளையாட்டு வீரனுக்குப் பயிற்சி, ஃபிட்னஸ் ஆகியவற்றைவிட, தூக்கமும் ஓய்வும் மிக முக்கியம். சத்யன் அவற்றை மிஸ்செய்தார். இருப்பினும், அவை தன் ஆட்டத்தைப் பாதிக்காமல் பார்த்துக்கொண்டார்.

ஒவ்வோர் ஆண்டும் குறைந்தபட்சம் 10 சர்வதேச தொடர்களிலாவது விளையாடினார். 2013-ம் ஆண்டு நடந்த பிரேசில் ஓப்பன் தொடரில் 21 வயதுக்குட்பட்டோர் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்று அசத்தினார். போட்டிகளில் பங்கேற்றதால் செமஸ்டர் பரீட்சைகளைத் தவறவிட்டார். அதையும்கூட எந்தக் கஷ்டமும் இல்லாமல் எளிதில் க்ளியர் செய்தார். இப்படி தன்னுடைய பிரச்னைகள் எதையும் பெரிதுபடுத்திப் பார்க்காமல், தடைகளை எளிதில் உடைத்தெறிந்தார். ஆனால், அடுத்து விழுந்தது பெரிய அடி.

2015-ம் ஆண்டு நவம்பரில் கெளஹாத்தியில் நடந்த தேசிய அளவிலான போட்டிக்கு விளையாடச் சென்றிருந்தார் சத்யன். அந்தத் தொடருக்குப் பிறகு அறிவிக்கப்படும் தேசிய தரவரிசையில், முதல் நான்கு இடங்களுக்குள் இருப்பவர்கள் ரியோ ஒலிம்பிக் தொடரின் தகுதிச்சுற்றுக்கு முன்னேறுவார்கள். அப்போது நல்ல ஃபார்மில் இருந்த சத்யன், அந்தத் தொடரில் பங்கேற்றிருந்தாலே போதுமானதாக இருந்திருக்கும். ஆனால், அவரின் தந்தை உடல்நலக் குறைவால் காலமாக, சென்னை திரும்பிவிட்டார் சத்யன். ஒலிம்பிக் வாய்ப்பு தவறியது.

இந்த இடத்திலும் அவர் மனதளவில் சறுக்கிவிடவில்லை. பயிற்சியைக் கடுமையாக்கினார். தன் ஆட்ட நுணுக்கங்களைச் சரிசெய்தார். அதுவரை ரிஸ்க் இல்லாத `சேஃப் கேம்’ ஆடிக்கொண்டிருந்தவர், தன் கேம் ப்ளானை மாற்றினார். சர்வீஸ்களை ரிசீவ் செய்வதில் அதிகம் கவனம் செலுத்தினார். தன் வேகத்தை பன்மடங்கு கூட்டினார். ஒவ்வொரு தொடரிலும் எதிராளிகளுக்கு ஏற்ப ரிஸ்க் எடுக்கத் தொடங்கினார்.

முதலில் தன்னைவிட தரவரிசையில் பின்தங்கி இருந்த வீரர்களுக்கு எதிராக, அடுத்து தனக்குச் சமமான வீரர்களுக்கு எதிராக, அதன் பிறகு தன்னைவிட பெரிய வீரர்களுக்கு எதிராக தன் புதிய ஆட்ட முறையைப் பண்படுத்தினார். `இதுதான் சத்யன்’ என நினைத்து, இவரை எதிர்த்து விளையாடியவர்களுக்கு ஆச்சர்யம், அதிர்ச்சி! 2016-ம் ஆண்டு பெல்ஜியம் ஓப்பனில் அனைவரையும் `அதிர்ச்சி’ மோடிலேயே வைத்திருந்தார். `பெல்ஜியம் ஓப்பன் பட்டத்தை வென்ற அண்டர்டாக்’ என்று ஊடகங்கள் பாராட்டின. சரத் கமல் எகிப்து ஓப்பனை வென்ற பிறகு, ப்ரோ தொடரை வெல்லும் இரண்டாவது இந்தியன்; அதுவும் ஒரு தமிழன்!

Previous Post

துல்லியமான பந்து வீச்சால் பஞ்சாப் அணியை இலகுவாக வென்றது பெங்களூர்!

Next Post

ஆட்டையக் கலைச்சிட்டிங்களே அஷ்வின்!

Next Post

ஆட்டையக் கலைச்சிட்டிங்களே அஷ்வின்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures