‘பாகமதி’ படத்திற்குப் பின் அனுஷ்கா நடித்து வரும் படம் ‘நிசப்தம்’. இந்தப் படத்தை தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியிட உள்ளார்கள்.
இந்தப் படத்தில் மாதவன் கதாநாயகனாக நடிக்கிறார். அஞ்சலி இரண்டாவது கதாநாயகியாக நடிக்கிறார். ஹேமந்த் மதுக்கர் இயக்கும் இந்தப் படத்திற்கு கோபி சுந்தர் இசையமைக்கிறார். இப்படத்தின் டீசரை வரும் நவம்பர் 7ம் தேதி வெளியிடப் போவதாக அறிவித்துள்ளார்கள். அந்த டீசர் வெளியீடு அறிவிப்புக்கு ஒரு டீசர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அனுஷ்காவின் ‘நிசப்தம்’ என்றே குறிப்பிட்டுள்ளார்கள்.
அப்படியென்றால் படத்தில் மாதவன் சிறப்புத் தோற்றத்தில்தான் நடிக்கிறார் போலிருக்கிறது.

