த்ரிஷா நடிக்கும் பரமபத விளையாட்டு படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் புரோமோஷனுக்காக பிரஸ்மீட் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தனது பட புரோமோஷன் அனைத்திலும் த்ரிஷா தவறாமல் கலந்து கொள்வார் என்பதால், இந்த பிரஸ்மீட்டிற்கும் த்ரிஷாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரஸ்மீட்டிற்கான வேலைகள் நடந்து வரும் நிலையில், அதே நாளில் மணிரத்னம் இயக்கத்தில் த்ரிஷா முக்கிய வேடத்தில் நடிக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் போட்டோ சூட் நடக்க உள்ளதாகவும், அதில் த்ரிஷா கலந்து கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனால் பரமபத விளையாட்டு பிரஸ்மீட்டிற்கு த்ரிஷா வருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையில் நயன்தாராவை போல் த்ரிஷாவும் புரோஷன் நிகழ்ச்சிகளின் கலந்து கொள்வதை தவிர்த்து வருவதாக சினிமா வட்டாரத்தில் வதந்தி பரவியது.
இதனால் அதிர்ச்சி அடைந்த த்ரிஷா தரப்பு, எப்போது ப்ரஸ்மீட் வைத்தாலும் தான் வர தயார் எனவும், தனக்காக பிரஸ்மீட்டை தள்ளி வைக்க வேண்டாம் எனவும் உறுதி அளித்துள்ளது. அத்துடன் போட்டோ சூட்டை முடித்துவிட்டு கண்டிப்பாக பிரஸ்மீட்டிற்கு வருவதாக தயாரிப்பளிடமும் த்ரிஷா கூறி இருப்பதாக கூறப்படுகிறது.

