கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மலையாளத்தில் நிவின்பாலி, நயன்தாரா நடிப்பில் வெளியான படம் லவ் ஆக்சன் டிராமா. மலையாளத்தில் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு இந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்திருந்தார். இவரை கதைசொல்லி அசத்தி, ஒருவழியாக மலையாள திரையுலகிற்கு மீண்டும் அழைத்து வந்தவர் இந்த படத்தின் இயக்குனர் தயன் சீனிவாசன்.
அந்த படத்தை இயக்கி வெற்றிப்படமாக்கியாவர், அடுத்த படத்தை இயக்குவதற்கான வேலைகளில் இறங்குவார் என பார்த்தால் மீண்டும் கதாநாயகனாக நடிக்க அழைப்பு வரவே டைரக்சனை ஒதுக்கி வைத்துவிட்டு நடிக்க சென்றுவிட்டார். இந்த படத்திற்கு பத்திர குருபானா என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. வினய் ஜோஸ் என்பவர் இயக்கும் இந்த படத்தில் இவருடன் பிரபல மலையாள காமெடி நடிகர்களான அஜு வர்கீஸ் மற்றும் நீரஜ் மாதவ் இருவரும் இணைந்து நடிக்கின்றனர்.

