நயன்தாரா மீண்டும் பேய் படத்தில் நடிக்க உள்ளாராம். பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா நடிப்பில் வெளியான பேய் படம் பரி. இந்த படம் ஹிட்டாகியுள்ள நிலையில் அதை தமிழில் ரீமேக் செய்யப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பிரபல தயாரிப்பாளர் ஒருவர் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கியுள்ளாராம்.
இந்த படத்தில் அனுஷ்கா கதாபாத்திரத்தில் நயன்தாராவைபிரபல தயாரிப்பாளர் ஒருவர் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கியுள்ளாராம். இந்த படத்தில் அனுஷ்கா கதாபாத்திரத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க விரும்புகிறார்களாம். படத்தில் நடிப்பது குறித்து நயன்தாராவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.
பேய் படம் ரிலீஸானால் தமிழ் ரசிகர்கள் அதை கண்டிப்பாக ஹிட்டாக்குவார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. பரி ரீமேக்கில் நயன்தாரா நிச்சயம் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பேய் படங்களில் நடிப்பது நயன்தாராவுக்கு புதிது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.