Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

நண்பர்களை வாழ்த்த ஓடோடி வரும் விஜயசேதுபதி

February 16, 2020
in Cinema
0

நாளைய இயக்குனர்களின் படங்களில் நடித்து பின் னர் அவர்கள் மூலமாக திரைத்துறையிலும் காலடி எடுத்து வைத்தவர் விஜயசேதுபதி. அப்படி சினிமாவில் வந்தவர் பின்னர் நாளைய இயக்குனர்கள் பலருக்கு கால்சீட் கொடுத்து நடித்தார். இப்போது வரை தனது நட்பு வட்டார இயக்குனர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் விஜயசேதுபதி. அதோடு சில நண்பர்களுக்காக அவர்களின் படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்துக்கொடுத்துள்ளார்.

அப்படிப்பட்ட விஜயசேதுபதி, கடந்த வெள்ளிக்கிழமை அன்று சென்னையில் நடிகர் போஸ் வெங்கட் முதன்முதலாக இயக்கியுள்ள கன்னிமாடம் படத்தின் ஆடியோ விழாவிலும் கலந்து கொண்டார். அன்றைய தினம் சென்னைக்கு வெளியே ஒரு படப்பிடிப்பில் இருந்தபோதும் நண்பர் போஸ் வெங்கட்டை வாழ்த்த வேண்டும் என்பதற்காக தாமதமாக அந்த விழாவிற்கு வந்த விஜயசேதுபதி, கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நான் நடித்த கவண் படத்தில் போஸ் வெங்கட் வில்லனாக நடித்தார். அவரிடத்தில் ஒரு ஆண்மைத் தனம் உண்டு. அதோடு அவரது முகத்தைப்பார்த்தால் ஒரு நம்பிக்கை வரும். அப்படிப்பட்ட அவர் இந்த விழாவிற்கு நான் கண்டிப்பாக வருவேன் என்று நம்பினார். அந்த நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே அவரை வாழ்த்த ஓடோடி வந்தேன் என்று பேசினார்.

Previous Post

சம்பளத்தை ஆதரவற்ற இல்லத்துக்கு கொடுத்த சன்னிலியோன்

Next Post

சந்தானத்தின் சர்வர் சுந்தரம் மீண்டும் பின்வாங்கியது

Next Post

சந்தானத்தின் சர்வர் சுந்தரம் மீண்டும் பின்வாங்கியது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures