பீக்கில் இருந்தபோதே நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்ட சமந்தா, திருமணத்திற்கு பின்பு படங்களின் எண்ணிக்கையை குறைத்துக் கொண்டாலும் நடிப்பதை கைவிடவில்லை. தற்போது 96 படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ள ஜானு படத்தின் ரிலீசை ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார். இன்னொரு பக்கம் சமூக சேவைகளிலும் ஈடுபட்டு தனது கவனத்தை செலுத்தி வரும் சமந்தா, இதைத்தாண்டி இன்னொரு புதிய தளத்தில் காலடி எடுத்து வைத்துள்ளார்.
ஆம்.. கல்வித்துறையில் தனது கவனத்தை திருப்பியுள்ள இவர், தனது நண்பர்களுடன் சேர்ந்து ஏகம் என்கிற ஒரு பிரீ ஸ்கூல் ஒன்றை ஐதராபாத்தில் உள்ள ஜூபிலி ஹில்ஸில் ஆரம்பித்துள்ளார். குழந்தைப் பருவத்திலிருந்தே ஒரு முழுமையான கல்வியை கற்றுத் தரும் விதமாக இந்த பள்ளியை நடத்த இருக்கிறார்களாம்.

