சிம்புவுக்கு, எப்போதெல்லாம், புதுப்படங்கள் ரிலீசாகிறதோ, அப்போதெல்லாம் அவரைப் பற்றி சர்ச்சைகள் எழுந்து, ரிலீசுக்கு முட்டுக்கட்டை ஏற்படுகிறது. இதுவரை, மற்றவர்களால், அவருக்கு தொல்லை இருந்தது. இந்த முறை, அவராக வாயை கொடுத்து, வலையில் சிக்கி விட்டார்.
சமூக வலைதளங்களில், அவரைப் பற்றி கடுமையாக விமர்சனங்கள் எழுந்தாலும், அதைப் பற்றி எல்லாம் கவலையில்லாமல், தைரியமாக இருக்கிறார். அவர் நடித்த, வந்தா ராஜாவாகத் தான் வருவேன் என்ற படம், இன்று ரிலீசாகிறது. சுந்தர் சி படம் என்பதால், கேத்ரீன் தெரசா, மேகா ஆகாஷ், நாசர், பிரபு என, நட்சத்திர பட்டாளம், படத்தில் நிரம்பி வழிகிறது.
‘இந்த படத்தில் தொடர்புடைய மற்றவர்களுக்கு எப்படியோ, இந்த படத்தின் வெற்றி தான், சிம்புவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போகிறது’ என்கின்றன, கோலிவுட் வட்டாரங்கள்.

