மலையாளத்தில் மகேஷின்டே பிரதிகாரம் படத்தில் அறிமுகமானவர் அபர்ணா முரளி. தமிழில் எட்டு தோட்டாக்கள் படத்தில் நடித்தவர், சர்வம் தாளமயம் படத்தில் ஜி.வி.பிரகாசுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இதையடுத்து தீதும் நன்றும் என்ற படத்திலும் நடிக்கிறார்.
இந்தபடம் குறித்து அபர்ணா முரளி கூறுகையில், சர்வம் தாளமயம் படத்தில் என் கதாபாத்திரம் குறைவான நேரம் வந்தாலும், கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதோடு, ரசிக்கும்படியாக உள்ளது. அந்தவகையில், நிறைய படங்களில் நடிப்பதைவிட குறைவான படங்கள் என்றாலும் நல்ல படங்களாக தேர்வு செய்து நடிப்பேன் என்று சொல்லும் அபர்ணா, தற்போது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் உள்ளார்.
மேலும், எனது பெற்றோர் இசைக்கலைஞர்கள். நானும் பாடகிதான். மலையாளத்தில் பல படங்களில் பாடியுள்ள நான், தமிழில் நடித்த எட்டு தோட்டாக்கள் படத்திலும் பாடினேன். தொடர்ந்து நடிப்பைப் போலவே பாடுவதிலும் ஆர்வம் காட்டப்போகிறேன் என்கிறார்.

