நடிகை சாக் ஷி அகர்வால், சினிமாவில் பிஸியாக இருந்தாலும், சமூக சேவையில் நாட்டம் உள்ளவர்.
இது குறித்து அவர் கூறியதாவது:சமீபத்தில், ஆட்டிசம் குறைபாடு உடைய குழந்தைகளின் இல்ல காப்பகத்திற்கு சென்று, அவர்களுடன் சில மணி நேரம் கழித்தேன்.
இந்தியாவில், 1,000த்திற்கு, 9 குழந்தைகள், இக்குறைபாட்டால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.அவர்களது அன்பில் கரைந்துபோனேன்.
ஆட்டிசம் என்பதை மனநல குறைபாடு என, பலர் நினைக்கின்றனர். இது ஒரு குறைபாடு தானே தவிர, நோய் அல்ல.இவ்வாறு அவர் கூறினார்.

