காதல் கோட்டை பட இயக்குனர், அகத்தியனின் மூத்த மகள், கிருத்திகா, சினிமாவில் ஆடை வடிவமைப்பாளராக இருக்கிறார். இரண்டாவது மகள், விஜயலட்சுமி, சென்னை 28 மற்றும் அஞ்சாதே என, பல படங்களில் நாயகியாக நடித்தார். பின், திருமணம் செய்து, ‘செட்டில்’ ஆகி விட்டார். அவரைத் தொடர்ந்து, தற்போது, அகத்தியனின் மூன்றாவது மகள், நிரஞ்சனியும், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தில், கதாநாயகியாக நடித்து வருகிறார். இதற்கு முன் இவர், பென்சில், கதகளி மற்றும் கபாலி படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். எடுத்து வைத்தாலும், கொடுத்து வைக்க வேணும்!

