தமிழில் பேய்கள் ஜாக்கிரதை உள்ளிட்ட பல்வேறு படங்களில் பாடல்களுக்கு மட்டும் நடனம் ஆடிய நடிகை கெஹனா. இவர், தமிழ் படங்கள் தவிர, இந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் தொடர்ந்து நடனம் ஆடிக் கொண்டிருந்தார்.
இதனால், அவர் சென்னை, ஹைதராபாத், மும்பை என பல்வேறு நகரங்களுக்கும் பயணம் செய்து கொண்டே இருந்தார். அவர், தற்போது இந்தியில் எடுக்கப்பட்டு வரும் ஒரு வெப் சீரியலில் நடித்துக் கொண்டிருந்தார். தொடர்ச்சியாக 48 மணி நேரம் அவர் நடித்துக் கொண்டிருந்தார். இதனால், அவருக்கு திடுமென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. மாரடைப்பும் ஏற்பட, அவர், படபிடிப்பு தளத்திலேயே மயங்கி விழுந்தார்.
அருகிலேயே இருக்கும் ரக் ஷா மருத்துவமனைக்கு, கெஹனாவை உடனடியாக எடுத்துச் சென்றனர். அவரை சோதித்த மருத்துவர்கள், அவருக்கு சர்க்கரை நோய் மற்றும் இரத்த அழுத்த நோய் தீவிரமாக இருப்பதாக குறிப்பிட்டனர். அதோடு, அவருக்கு தொடர்ச்சியான மூச்சுத் திணறல் இருப்பதால், செயற்கை சுவாசம் அளிக்கவும் ஏற்பாடு செய்தனர்.
தற்போது, கெஹனாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

